12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது புதுவை அரசு!
By : Janani
கொரோனா தொற்றால் கடந்த ஒரு வருடமாகப் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த தொற்றின் அச்சம் கருதி மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது கடந்த வாரம் தேர்வு மையத்தால் CBSE ரத்து செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நடைமுறையை மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியைத் தவிர, தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது.
முன்னர் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. இந்த குழுவானது பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பார் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இதற்கிடையில், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளைச் சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜூன் 28 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அது உள் மதிப்பீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும் அது குறிப்பிட்டது.
"இந்த கொரோனா தொற்றால் பல்வேறு பள்ளிகள் அடிப்படையிலான மதிப்பீடுகளை இன்னும் முடிக்காதது கண்டறியப்பட்டுள்ளது. எனவே செய்முறைத் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளை நிலுவையில் வைத்துள்ள பள்ளிகள் அதனை ஆன்லைன் மூலம் நடத்தி மற்றும் 28.06.2021 இல் வழங்கப்பட்டுள்ள இணைப்பில் சமர்ப்பிக்கவேண்டும்," என்றும் CBSE வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.