வல்லரசை நோக்கி நமது நாடு செல்கிறது: தேசிய இளைஞர் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!
By : Thangavelu
நமது நாடு வல்லரசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசி இளைஞர் விழாவில் கூறியுள்ளார்.
25th #NationalYouthFestival Inaugural Program
— DD News (@DDNewslive) January 12, 2022
PM @narendramodi inaugurates an MSME Technology Centre and Perunthalaivar Kamarajar Manimandapam - an auditorium with open air theatre
#AmritMahotsav pic.twitter.com/kTPG68XXIE
புதுச்சேரியில் நேற்று (ஜனவரி 12) தேசிய இளைஞர் விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை காரணமாக தற்போது தேசிய இளைஞர் விழா காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. ஒருவர் தங்களது நாட்டுக்கு பங்களிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. வளம், அறிவியல், வணிகம் போன்றவை அதற்கு உதாரணங்கள் ஆகும்.
மேலும், பண்பு இல்லாத கல்வி, கொடை இல்லாத செல்வம், அறம் இல்லாத வணிகம், மனிதநேயம் இல்லாத அறிவியல் பயனற்றது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானதும் கூட பண்பு. கொடை, ஒழுக்கம், மனிதநேயம், நன்னடத்தை போன்றவை ஒரு சிறந்த இந்திய இளைஞருக்கு மிக முக்கிய குறியீடாகும். 25வது தேசிய இளைஞர் விழா 2022ன் கருப்பொருள் ஆகும். மேலும், நமது பிரதமர் மோடி அவர்கள் திருக்குறளின் வழிகாட்டுதலை ஏற்று செயல்பட்டு வருகிறார். எனவே இந்தியா வல்லரசு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar