Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு!

புதுவை முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 4:33 AM GMT

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவைக்கு தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். அது போன்று சினிமா தயாரிப்பாளர்களும் புதுச்சேரியில் தங்கள் படத்தின் சில காட்சிகளை எடுப்பது வழக்கம். இது போன்று படம் எடுக்க வேண்டும் என்றால் அம்மாநில அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி விதிப்பு சற்று கூடுதலாக இருப்பதாக சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரிக்கு வரும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் அவ்வப்போது முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். அதே போன்று தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளார். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story