பாகூர் பகுதியில் தொடர் மழை எதிரொலி: தீவுகளாக மாறிய குடியிருப்புகள்!
புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாகூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீண்டும் தீவுகளாக மாறியுள்ளது.
By : Thangavelu
புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாகூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீண்டும் தீவுகளாக மாறியுள்ளது.
புதுச்சேரி, பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் தற்போதுதான் ஓரளவு வெள்ளநீர் வடிந்தது. இதனிடையே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியதால் நேற்று முதல் மீண்டும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று இடைவிடாமல் பெய்த மழையால் பாகூர், கிரும்பாக்கம், தவளக்குப்பம், கரையாம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீண்டும் தீவுகளாக காட்சி அளிக்கிறது.
இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் வீடுகளில் வந்து விடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விரைவில் மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi