புதுச்சேரி - 33.5 கோடியில் புதிய பைபாஸ் சாலை பணி!
ரூ.33.5 கோடியில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
By : Bharathi Latha
புதுச்சேரியில் தீவிரப் போக்குவரத்து நெரிசல் காரணமாக 100 அடி ரோடு அரும்பார்த்தபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அவை இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த மேம்பாலங்கள் அமைக்கும் போது நகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி என்பது முற்றிலும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி - விழுப்புரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.
ஏற்கனவே பிரமாண்டமான கட்டிடங்கள், வணிக வளாகங்கள் இருப்பதன் காரணமாக சாலையை அகலப்படுத்த முடியாமல் போய்விட்டது. புதுச்சேரியை உலுக்கிய விபத்து காரணமாக சாலையில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் புதுச்சேரியில் அலங்கேறியது. இதுபோன்ற முடிவை தவிர்க்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அரும்பார்த்த புரம் பைபாஸ் சாலை பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அரசிற்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அந்த வகையில் தற்போது இந்த சாலை பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த பைபாஸ் சாலை அமைப்பதற்காக சுமார் 33 கோடி 44 லட்சம் செலவிடப்படுவதாக தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சாலையில் மழை நீர் வடிகால் வசதிக்காக 11 சிறிய பாலங்கள் அமைக்கப்பட இருக்கிறது. நான்கு முக்கிய சந்த்ப்புகளும் தற்போது இந்த பாதை வழியாக மேம்படுத்தப்பட உள்ளது. பைபாஸ் சாலை வழியாக விழுப்புரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் அனைத்தும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.
Input & Image courtesy: Thanthi