Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரோவில் சென்று வந்தால் ஒரு விதமான நேர்மறையான ஆற்றல் உருவாவதே காணமுடியும் - ஆர் என்.ரவி

அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா -அரவிந்தரின் போதனைகள் வாழ்வை நெறிப்படுத்தும் அதை பின்பற்ற வேண்டும் என்று அரவிந்தரின் பிறந்தநாள் விழாவில் கவர்னர் ரவி கூறினார் .

ஆரோவில் சென்று வந்தால் ஒரு விதமான நேர்மறையான ஆற்றல் உருவாவதே காணமுடியும் - ஆர் என்.ரவி

KarthigaBy : Karthiga

  |  11 Aug 2022 2:15 PM GMT

அரவிந்தரின் போதனைகள் வாழ்வை நெறிப்படுத்தும் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர், கவிஞர் ,யோகி தத்துவஞானி, ஆன்மீகவாதி என பன்முகத்தன்மை கொண்ட அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

தமிழக கவர்னரும், ஆரோவில் பவுண்டேஷன் தலைவருமான ஆர் எம் ரவி தலைமை தாங்கினார் கவர்னரின் செயலாளர் ஆனந்த் பாட்டில் வரவேற்றார்.

விழாவில் கவர்னர் ஆர். என். ரவி பேசியதாவது:-

இந்தியா பல்வேறு விதமான சித்தாந்தங்கள் கொண்டுள்ள நாடு. இந்த மண்ணில் பல்வேறு விதமான நெருக்கடிகள் இருந்துவருகின்றன. மனிதர்கள் இடையே மோதல் ,பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு சவால்களை தினமும் சந்தித்து வருகிறோம்.

இப்படிப்பட்ட மண்ணில்தான் ஆரோவில் போன்ற புனிதமான இடங்களும் உள்ளன. இந்த இடத்தை, இங்குள்ள இயற்கையை நேசிக்க வேண்டும். ஆரோவில் சென்று வந்தால் ஒரு விதமான நேர்மறையான ஆற்றல் உருவாவதே காணமுடியும்.

இதுபோன்ற இடங்களை பார்வையிட அனைவரையும் வலியுறுத்தவேண்டும். அரவிந்தர் யோகி, தத்துவஞானி, ஆன்மீகவாதி போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.

அரவிந்தரின் போதனைகள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் நெறிப்படுத்தும். அரவிந்தரின் போதனைகளை வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் முடிவில் ஆரோவில் பவுண்டேஷன் செயலாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஜெயந்தி ரவி நன்றி கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News