பயனற்ற பொருட்களில் அவதார் 2 கதாபாத்திர பொம்மைகள்: தயாரித்த அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்!
பயனற்ற பொருட்களில் உருவான அவதார் கதாபாத்திர பொம்மைகளை தயாரித்த அசத்திய புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள்.
By : Bharathi Latha
பாகூர் அருகே செலிமேடு கிராமத்தில் வாணிதாசர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தான் தற்பொழுது பயனற்ற பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக குப்பையில் தூக்கி போட வேண்டிய பொருட்கள் மூலம் சில கலைகளை புகுத்தி, அவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்றும் கலையை மாணவர்கள் மத்தியில் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் கலங்கி களமிறங்கி இருக்கிறது.
மேலும் அழிவின் உயிர்ப்பு என்று பெயரில் இப்பள்ளியில் இயங்கும் கலைக்கூடத்தில் கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய சுரைக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் காய்ந்த இல்லை மட்டைகளைக் கொண்டு மாணவர்கள் பலபேர் பல்வேறு படைப்புகளை உருவாக்குகின்றனர். அந்த வகையில் தற்போது மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் அவதார் 2 படத்தின் கதாபாத்திரங்களை பயணிச்ச பொருட்களைக் கொண்டு தத்துவமாக உருவாக்கி பள்ளியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக பயனற்ற பொருட்களின் உருவான அவதார் 2 படத்தின் கதாபாத்திரங்களை தயாரித்த அரசு பள்ளி மாணவர்களை பலரும் ஆச்சரியமாக பார்த்து இருக்கிறார்கள். மேலும் பள்ளி மாணவர் உமாபதி வழிகாட்டுதலின் படி மாணவர்கள் நவநீதகிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோர் இந்த படைப்புகளை உருவாக்கி அசத்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் அரசி பள்ளி மாணவர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த பள்ளியின் அழிவின் உயிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் கலைக்கூடத்தின் சிறப்பு அம்சத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi