பீஸ்ட் கட்டண உயர்வுக்கு தியேட்டர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை: புதுச்சேரி அரசு தகவல்!
By : Thangavelu
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்கு புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் கட்டணமாக ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்படவில்லை என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அங்கு ஏப்ரல் 13 முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப்போவதாக போர்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற விலை ஏற்றத்திற்கு பொதுமக்கள் கூறும்போது, இதுவரை இது போல் எந்த படத்திற்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றும் செயலாக இது அமைந்துள்ளது. யாருடைய படம் வந்தாலும் சரியான கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும். பெரிய நடிகர் படம் என்றால் எதற்காக இப்படி விலை ஏற்றம் செய்ய வேண்டும் எனக் கூறினர். இது போன்ற செயலை அரசு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகம் தரப்பில் கூறும்போது: புதுச்சேரியில் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Hindu Tamil