Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி மேலவை எம்.பி. தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு - நீண்ட நாள் சஸ்பென்ஸ் முடிவு!

நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று செய்கிறார்.

புதுச்சேரி மேலவை எம்.பி. தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு - நீண்ட நாள் சஸ்பென்ஸ் முடிவு!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Sept 2021 12:43 PM IST

புதுச்சேரி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக செல்வகணபதி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற மேலவையின் புதுச்சேரி உறுப்பினராக அ.தி.மு.க-வை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உள்ளார். இவரது பதவிக்காலம் அக்டோபர் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய மேலவை உறுப்பினரை தேர்வு செய்ய அக்டோபர் மாதம் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. அதே போன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மேலவை உறுப்பினர் வேட்பாளராக பா.ஜ.க-வை சேர்ந்த செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பா.ஜ.க தலைமை அலுவலக பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று இரவு வெளியிட்டார். அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் மேலவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் செல்வகணபதி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு புதுச்சேரி சட்டமன்ற நியமன எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News