அடுத்தவர் மொழி மற்றும் தொழிலை பழிப்பது நமது தமிழ் கலாச்சாரத்திற்கு அழகல்ல: ஆளுநர் தமிழிசை!
By : Thangavelu
'நம்முடைய தாய் மொழியான தமிழை பாராட்டும்போது அடுத்தவர்களின் மொழியை பழிப்பதோ, அடுத்தவர் தொழிலை குறைச்சி மதிப்பிடுவது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல' என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பௌர்ணமி தினத்தில் கன்னியாகுமரியில் நடந்து வரும் கடல் ஆரத்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவை எனவும், இது கங்கா ஆரத்தி போன்று உள்ளது என்றார்.
மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்தி மொழியை விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்றார். மக்களுக்கான பெயர் பலகை கூட தமிழில் உள்ளது. நமது தாய் மொழியை பாராட்டும்போது, அடுத்தவர்களின் மொழி மற்றும் தொழிலை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 7 Tamil
Image Courtesy: Twiter