Kathir News
Begin typing your search above and press return to search.

போராட்டத்திலும் அடித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் - மக்களுக்கு காமெடியாகிப் போன புதுச்சேரி காங்கிரஸ்

போராட்டத்திலும் அடித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் - மக்களுக்கு காமெடியாகிப் போன புதுச்சேரி காங்கிரஸ்
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2022 11:59 AM GMT

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பற்றிய வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நேற்று (ஜூன் 15) மூன்றாவது நாளாக ஆஜராகினார். ராகுலுக்கு எப்படி சம்மன் அனுப்பலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் மத்திய வருமான வரித்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்டது. நேற்று காலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்த வேண்டாம். உடனடியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.

அதற்கு குறுக்கிட்ட நாராயணசாமி அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் கொறடா அனந்தராமன், எல்லாவற்றையும் தடுக்க வேண்டார். நாங்கள் ஆதங்கத்தில் இருக்கும்போது இதுபோன்ற அடக்கு முறையை நீங்கள் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. மற்ற நிர்வாகிகளிடமும் மோதல் போக்கு நிலவியது. இந்த சம்பவம் புதுச்சேரி காங்கிரஸ் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News