புதுச்சேரி: செல்போன் செயலிகளை நம்பி கடன் பெற வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை..
செல்போன் செயலிகள் மூலமாக கடன்கள் பெற வேண்டாம் என்று போலீசார் அறிவுரை.
By : Bharathi Latha
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மையமாகப்பட்ட பிறகு பணத்தின் தேவை ஆரம்பித்து இருக்கிறது. தற்போது மக்கள் தங்களுடைய செல்போன் மூலமாக சட்ட விரோதமாக செயல்படும் கடன் செயல்களை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கடன்களை பெற்று இருக்கிறார்கள். இத்தகைய பணங்கள் அதிக வட்டியை பெற்று விடுகிறது, பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸ் நிலையத்தை வருகிறார்கள். எனவே பணத் தேவைக்காக செல்போன் செயலியை பயன்படுத்தி கடன் வாங்க வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு அவர்கள் இது பற்றி கூறும் பொழுது, புதுவையில் சைபர் கிரைம் போலீஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மோசடி வழக்குகளில் ரூ.12 கோடியே 86 லட்சம் வங்கி கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளது. இணைய தளத்தில் தற்போது வருகிற முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல் போன்றவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது எதிர்தரப்பினர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் பல்வேறு பொய்யான தகவல்களை மக்களுக்கு ஆசைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பிவிடுகிறார்கள். அதன் மூலம் அதனை பயன்படுத்தும் நீங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறீர்கள். ஓ.டி.பி. எண்ணை பகிர வேண்டாம் தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News