தீவிர கடல் அரிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் - விரிவான திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல்!
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் பார்வையிட்டார்.
By : Bharathi Latha
தமிழக பகுதிகளில் கடலில் கருங்கற்கள் கொட்டிய பிறகு புதுச்சேரி கடலோர மீனவ கிராமங்களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளை முதல்வர் ரங்கசாமி, நேற்று ஆய்வு செய்தார். கடல் அரிப்பை தடுக்க விரிவான திட்டம் தயாரித்து, குறிப்பாக 25 கோடி ரூபாய் செலவில் இங்கு விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என்றும் முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பின் தீவிரம் அதிகரிக்கிறது.
பிள்ளை சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்ததை முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். இங்குள்ள பிள்ளைச்சாவடி கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தார். அவருடன் சபாநாயகர் ஆர்.செல்வம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜே.சரவண குமார், காளப்பேட்டை எம்.எல்.ஏ பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீடுகள் சேதங்களை பார்வையிட்டனர்.
திரு.கல்யாணசுந்தரம் கூறுகையில், கடல் அரிப்பின் தீவிரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி காரணமாக கடலை ஒட்டி உள்ள கிராமங்களின் சிமென்ட் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கும் இப்பகுதி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய சேதத்தை புதுச்சேரி சந்தித்து உள்ளது.
Input & Image courtesy: The Hindu