Begin typing your search above and press return to search.
பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி: புதுச்சேரி காவல்துறை ஏற்பாடு!

By : Thangavelu
புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி காவல்துறையின் சார்பாக, கோரிமேட்டில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாத காலம் தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் விளையாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியானது தினந்தோறும் மாலை 5.15 மணி முதல் 6.15 மணிவரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் 81247 30030 மற்றும் காவலர் நாதமணி 9787464317 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story
