Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள்!

புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

புதுச்சேரி: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள்!

ThangaveluBy : Thangavelu

  |  6 Dec 2021 3:26 AM GMT

புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது. தொற்று பரவலை தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளை திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது ஒருநாள் விட்டு ஒரு நாள் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் வகுப்புக்கு வருவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. பெற்றோர்களின் அனுமதி கடிதம் வாங்கி வருவது கட்டாயம். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The News Minute


Next Story
கதிர் தொகுப்பு
Trending News