Kathir News
Begin typing your search above and press return to search.

பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி: என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா!

புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் இலவச பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி: என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா!

ThangaveluBy : Thangavelu

  |  8 Jan 2022 2:15 AM GMT

புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் இலவச பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் வரஇருக்கிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 10 வகையிலான பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த பரிசுத் தொகுப்பில் 100 கிராம் மஞ்சள் தூள், 2 கிலோ பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் ஆகியவை தலா 1 கிலோ, முந்திரி பருப்பு, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், உளுந்து, பச்சை பருப்பு, பாசிபருப்பு என 10 வகையிலான பொருட்கள் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் தை பொங்கலை முன்னிட்டு புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மதிப்பு தலா ரூ.490 எனவும் கூறியுள்ளார்.

Source,Image Courtesy: Daily Thanthi


Next Story