தீபாவளி பரிசாக ரூபாய் 500 வழங்கப்படும் - பா.ஜ.க கூட்டணியிலான புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
தீபாவளி பரிசாக இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூபாய் 500 வழங்க புதுச்சேரி அமைச்சர் உத்தரவிட்டார்.
By : Bharathi Latha
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இலவச பேட்டி செயலுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் சத்திய பிரியங்கா தெரிவித்தார். மேலும் தீபாவளி ஒட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை உண்டான பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் ஏற்கனவே அறிவித்த இருந்தார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது தீபாவளி பரிசு ஆக ரூபாய் 500 வழங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி புதுச்சேரி அரசாங்கம் குடிப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் புதுச்சேரி நுகர்வோர் மற்றும் காரைக்காலில் சிறப்பங்காடி நடத்தப்பட உள்ளது.
இந்த சிறப்பு அங்காடி திருக்கானூர் மற்றும் காரைக்காலில் நடைபெற உள்ளது . 25 வகை மாளிகை பொருட்கள் ஒரே தொகுப்பாக இந்த சிறப்பங்காடி மூலம் ₹800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக தட்டாசாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் தீபாவளி சிறப்புங்காடியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.
Input & Image courtesy: News