Begin typing your search above and press return to search.
புதுவை மருத்துவமனை ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி!
By : Thangavelu
புதுச்சேரி தீயணைப்புத்துறை சார்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதிலும் தூரத்தில் இருக்கும் நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத்துறையினர் வருகின்ற முன்பாகவே தீயை அணைப்பது பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துமவனையில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். இதில் தண்ணீர், ரசாயன புகை உள்ளிட்டவைகளை கொண்டு தீயை அணைப்பது மற்றும் தீ விபத்தில் சிக்கும் நபர்களை காப்பாற்றுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story