கொரோனா விதிமுறைகளை கடைப்பிடியுங்கள்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்!
By : Thangavelu
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர்களுக்கு தொற்று பரவி வருகிறது. இண்டு தவணை தடுப்பூசியை ஏற்கனவே 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. அதன்படி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு நாடு முழுவதும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசியை செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், கொரோனா தொற்று முற்றிலும் குறைந்ததும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமை முதலமைச்சர் ரங்கசாமி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார். அப்போது சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் உதவி இயக்குனர்கள், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது: கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். அதே போன்று கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக்கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar