புதுச்சேரி: G20 மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டு பிரதிநிதிகள்!
G20 மாநாட்டின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 வெளிநாட்டு பிரதிநிதிகள் புதுச்சேரியில் பங்கேற்றனர்.
By : Bharathi Latha
G20 நாடுகளின் அமைப்பான இந்தியா, ரஷ்யா, ஜப்பான், அரேபியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தற்போது தலைமை பொறுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தலைமை பொறுப்பு டிசம்பர் மாதம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்கள் எனது இரவு செய்து 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் G20 உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பலதரப்பட்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. கல்வி முதல் உலகளாவிய சுகாதாரம் அறிவியல் ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளுக்கான மாநாடு இந்தியா முழுவதும் உள்ள 200 இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் இந்த மாநாடு நேற்று மற்றும் இன்று நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படியாக புதுவை முதலியார் பேட்டையில் உள்ள சுகன்யா கான்வகேஷன் சென்டரில் நேற்று 9:30 மணி அளவில் மாநகர தொடங்கியது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற இலட்சியத்தின் நீண்ட கால மகிழ்ச்சி பாதையை நோக்கி ஒரு புதிய தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் வெளிநாட்டு பிரதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வரவேற்கும் விதமாக புதுச்சேரி நகரம் முதல்வரும் முக்கிய சாலைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi