Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் உறுதி செய்ய வேண்டும்: கவர்னர் தமிழிசை பேச்சு!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசின் விரைவான நடவடிக்கை தேவை.

தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் உறுதி செய்ய வேண்டும்: கவர்னர் தமிழிசை பேச்சு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 March 2023 1:31 AM GMT

தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து இருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தையில் மிகவும் பிரபலமானது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. நம் அனைவரும் சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம். எனவே இங்கு இது போன்ற நல்லுறவை கெடுக்கும் விஷயங்களை நாம் அனுமதிக்க கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.


புதுச்சேரி மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம். எனவே இங்கு வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் பதிவிட பட்டு இருக்கிறது.


தமிழகத்தை நம்பி பல வெளி மாநில தொழிலாளர்கள் வந்து பணி புரிகின்றார்கள். அதனால் தவறான வதந்திகளை பரப்ப கூடாது. தமிழகத்தில் பணி செய்யும் வெளி மாநிலத்தவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தள பிரச்சனைக்கு வழி வகுக்கக் கூடாது சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News