நோயற்ற புதுச்சேரியை உருவாக்க மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்! ஆளுநர் தமிழிசை!
கல்லூரிகளில் தேர்வு எழுதுவதற்கு தடுப்பூசி கட்டாயம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
By : Thangavelu

இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லூரியில் திறந்தவெளி வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு திறந்தவெளி வகுப்பறையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாணவர்களே அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், நோயற்ற புதுச்சேரியை உருவாக்க வேண்டும். நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க நிரந்தரத் தீர்வு தடுப்பூசி ஒன்றுதான். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னறர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தால் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Topnews