புதுச்சேரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்காக இன்று அங்கு மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
By : Thangavelu
புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்காக இன்று அங்கு மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் பேட்டியில் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அரசு துரிதமான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மேலும் அவர் பேசும்போது, புதுச்சேரி முழுவதும் நவம்பர் முதல் வாரத்தில் 1 முதல் 8ம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. தற்போது 90 சதவீதத்திற்கு மேல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே அரசு பாதுகாப்பு விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai