மழை பாதிப்புகளை ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
By : Thangavelu
புதுச்சேரி, ஏனாமில் மழை, வெள்ள சேதம் பற்றி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆளுநரை வரவேற்பதில இரண்டு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி மாநிலம், ஏனாமில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பல்வேறு வீடுகளில் 5 அடி உயரம் வரையில் தண்ணீர் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புதுச்சேரி அரசு சார்பில் அவர்களுக்கு உணவு, உடைகள், நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏனாமில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi