பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த முயன்ற 600 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு!
By : Thangavelu
சுமார் 600 ஆண்டுகள் பழமையான 3 சிலைகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி நகர், சப்ரெய்ன் என்ற இடத்தில் பழமை வாய்ந்த சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ரகசியமாக தகவல் கி¬த்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர். அப்போது மிகவும் பழமை வாய்ந்த நடராஜர், வீணாதாரா சிவன், விஷ்ணு உள்ளிட்ட சிலைகள் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இந்த சிலையை வைத்திருந்த ஜோசப் கொலம்பானியிடம் இருந்து அனைத்தும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை பிரான்ஸ் நாட்டிற்கு கடத்தி சென்று விற்பதற்கு வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து கடத்தி செல்வதற்கு முன்பே போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai