Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: LIC நிறுவனம் செய்த தவறினால் ரூ.2½ லட்சம் நஷ்டஈடு!

LIC நிறுவனம் ரூ.2½ லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதுச்சேரி: LIC நிறுவனம் செய்த தவறினால் ரூ.2½ லட்சம் நஷ்டஈடு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 April 2023 2:46 AM GMT

புதுச்சேரியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் முதிர்வு தொகையை கொடுக்க காலதாமதம் ஆனதால் LIC நிறுவனம் ரூ.2½ லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சேவை குறைபாடுபுதுவை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.4 லட்சம் செலுத்தி பாலிசி எடுத்து இருந்தார். இந்த பாலிசி 5 வருடத்திற்கானது. ஆனால் காலக்கெடு முடிந்தும் முதிர்வு தொகையை கொடுக்க LIC நிறுவனம் காலதாமதம் செய்தது உண்மையாகி இருக்கிறது.


இந்த சேவை குறைபாடு குறித்து அப்பாதுரை புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் புகார் அளித்தார். நஷ்டஈடு வழங்குவது குறித்து, இந்த புகார் குறித்து நுகர்வோர் குறைதீர்ப்பு மாவட்ட ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


அப்போது, சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டு புகார்தாரருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதற்காக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கவும் LIC நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News