புதுச்சேரி: 19 இருக்கைகள் கொண்ட விமான சேவை விரைவில் தொடக்கம்!
புதுச்சேரியில் விரைவாக 19 இருக்கைகள் கொண்ட விமான சேவை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By : Bharathi Latha
புதுச்சேரியில் விரைவாக 19 இருக்கைகள் கொண்ட இலகுவான விமான சேவை தொடங்கு இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக விரைவில் புதுச்சேரி நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் இணைக்க 19 இருக்கிகள் கொண்ட இலகு ரக விமான சேவை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரியில் லாஸ்ட் பேட்டையில் விமான நிலையம் அமைந்து இருக்கிறது.
கடந்த பதிவு 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடனே 2013 ஜனவரி முதல் விமானங்கள் இயக்க பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவை 2014 பிப்ரவரி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் போக்குவரத்து சேவை தொடங்கியதாகவும் கூறப்பட்டது.
இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு எதுவும் இன்றி அக்டோபர் 2015 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் பிராந்திய சேவை இணைப்பு திட்டமான உதான் கீழ் விமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரியில் ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் வர இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலக இலகுரக விமான செய்திகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: The Hindu News