பாகூர் மணப்பட்டு காட்டுப்பகுதியில் திடீர் ஏற்பட்ட காட்டூத்தீ!
By : Thangavelu
பாகூர் தொகுதி அருகே உள்ள மணப்பட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் காடு உள்ளது. அங்கு முந்திரி, நெல்லி, நாவல், பனை மற்றும் சவுக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது.
இந்நிலையில், இன்று காலை திடீரென்று இந்த காட்டில் தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த பனை, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதுப்பற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி, அடித்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பனை, சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தானாக தீப்பிடித்ததா அல்லது யாரேனும் தீ வைத்தனமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi