புதுச்சேரி: புயல் எச்சரிக்கை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை!
புயல் எச்சரிக்கையை முன்னிட்டு புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை
By : Bharathi Latha
காரைக்கால், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டரை சந்தித்து, மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து மரம் வெட்டுவது குறித்தும், மீட்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும் பேரிடர் ஒத்திகையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
மாநில பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணை கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல் துறை ஆய்வாளர்களும் மற்றும் 70 காவல் துறையினர் ஒப்பந்த பணி அடிப்படையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், தேசீய பேரிடர் மீட்புப் படையினரின் ஆலோசனையின் மூலம் நேர்த்தியான பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியினை மாநில பேரிடர் மீட்புப்படையினருக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இப்படையினை மேம்படுத்துவதற்காக சிறப்பு காவல் படையிலிருந்து கடலோர மாவட்டங்களுக்கு 70 காவலர்கள் வீதம் மொத்தம் 2500 காவலர்கள் தேசீய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் போன்ற பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர்கள் அசட்டையான சூழலை சமாளிக்க தேசீய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Input & Image courtesy: Thanthi News