புதுச்சேரி : சிறுவர்களுக்காக 83 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசு!
புதுச்சேரியில் உள்ள 15 முதல் 18 வயது சிறார்களுக்கு செலுத்துவதற்காக 83 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது.
By : Thangavelu
புதுச்சேரியில் உள்ள 15 முதல் 18 வயது சிறார்களுக்கு செலுத்துவதற்காக 83 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றை தடுக்கின்ற விதமாக புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதனிடையே 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவுகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு நாளை (ஜனவரி 3) முதல் தடுப்பூசி செலுத்த உள்ளது. அதன்படி சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், 83 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேர் 15 முதல் 18 வயதுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் பத்து நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்குகளை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:The Hindu