கேஸ் மானியத்திற்கு எட்டு கோடி ஒதுக்கீடு... புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு..
By : Bharathi Latha
புதுச்சேரியில் அமைந்துள்ள கதிர்காம் தொகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்து நடத்தி கொடுத்து இருக்கிறார்கள். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். இந்த ஒரு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் முதல்வர் ரங்கசாமி, பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பேசி இருக்கிறார்.
அப்பொழுது பேசும் பொழுது புதுச்சேரியில் அரசாங்கத்திடம் இது இருக்கிறதா என்ற பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வருகிறது. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் பதிலளித்து, பெண்களுக்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு நிதி உள்ளதா? எப்படி கொடுப்பார் என நினைக்கலாம். முதலில் 70 ஆயிரம் பேருக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு தொகுதியாக விண்ணப்பம் பெற்று நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
பிறந்த பெண் குழந்தை பெயரில் ரூ 50 ஆயிரம் டெபாசிட் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. விபத்து காப்பீடு திட்டத்திற்கும் நிதி முழுவதும் அரசு செலுத்தி விட்டது. குறிப்பாக சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 300, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 150 காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனளிகளுக்கும் கேஸ் மானியம் வழங்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
Input & Image courtesy: News