Kathir News
Begin typing your search above and press return to search.

எனது மண், எனது தேசம் இயக்கம்.. புதுச்சேரியில் கலச யாத்திரை..

எனது மண், எனது தேசம் இயக்கம்.. புதுச்சேரியில் கலச யாத்திரை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Oct 2023 11:15 AM GMT

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக நாடு தழுவிய எனது மண், எனது தேசம் என்ற இயக்கம் தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து வட்டாரங்களிலும், நேரு இளைஞர் மையம் வட்டார அளவிலான கலச யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிராம அளவிலான கலச யாத்திரைகளின் போது, கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் மண், வட்டார அளவிலான நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு வரப்பட்டு, வட்டாரத் தலைமையிடங்களில் நடைபெறும் விழாக்களில் பெரிய கலசத்தில் சேகரிக்கப்படும். இந்திய அஞ்சல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, முன்னணி வங்கிகள், பொதுச் சேவை மையங்கள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், உள்ளாட்சி அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் போன்றவற்றின் ஒருங்கிணைப்புடன் மொத்தம் 364 வட்டார அளவிலான கலச யாத்திரைகளை நேரு இளைஞர் மையம் ஏற்பாடு செய்துள்ளது. வட்டார அளவிலான நிகழ்ச்சிகளின் போது, ஐந்து உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்படும்.


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம், தஞ்சாவூர் தென்மண்டல கலாச்சார மையம் ஆகியவை வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார அளவிலான கலசங்கள் மாநிலத் தலைநகருக்கும், பின்னர் தேசியத் தலைநகர் புதுதில்லிக்கும் கொண்டு செல்லப்படும், அங்கு இந்த மாத இறுதியில் எனது மண், எனது தேசம் இயக்கத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறும்.


இந்நிகழ்ச்சியில் சி.ஐ.எஸ்.எஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹர்பீத் கௌர், நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குநர் கே.குன்ஹமது, பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பாதுகாப்பு மேலாளர் சரிகா சவான், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் என்.வி.ராதாகிருஷ்ணன், கேந்திரிய வித்யாலயா முதல்வர் கிருஷ்ணசாமி, சிஐஎஸ்எஃப் கமாண்டன்ட் கார்த்திகேயன், உதவி கமாண்டன்ட் ஷேக் ஜப்பார், நேரு இளைஞர் மையத்தின் துணை இயக்குநர் ஜே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News