'இந்திய மாதா' என்ற சொல்கிறோம், 'பாரத மாதா' தானே சொல்றோம்.. பாயிண்டை பிடித்த ஆளுநர் தமிழிசை..
By : Bharathi Latha
இந்தியாவிற்கு பாரதம் என்று பெயரை அறிவித்த பிறகு தேசிய உணர்வு மேலோங்கும் பாரதமாதா, பாரத தேவி மற்றும் பாரத தேசம் என்று சொல்கிறோம். அதனால் பாரதம் என்பதை சரியானது என்று தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அப்பொழுது அவரிடம் இருபற்றியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இந்தியா பாரதம் என்று மாற்றப்பட உள்ளது. இதை உயர்மட்ட குழு அப்படி ஒரு பரிந்துரை கொடுத்து இருக்கிறது. பாரதியார் கூட பாரத தேசம் என்று தோள் கொட்டும் என்று பாடியிருக்கிறார், நாம் கூட பாரத மாதா என்று தான் சொல்கிறோம், இந்திய மாதா என்று சொல்வதில்லை ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தையும் பாரதம் அல்லது இந்தியா என்றுதான் சரத்து இருக்கிறது.
சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றிய போது மாநில உணர்வு தேசிய உணர்வு இருந்ததைப் போல இந்தியா என்கின்ற பெயரை பாரதம் என்று மாற்றும் பொழுதே அதை தேசிய உணர்வு மேலோங்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதில் பல விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் பாரதம் என்பது சரி என்பது எனது கருத்து என்று அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.
Input & Image courtesy: News