Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி பல்கலைக்கழகம்.. நூல் வெளியீடு விழாவின் சாராம்சம்..

புதுச்சேரி பல்கலைக்கழகம்.. நூல் வெளியீடு விழாவின் சாராம்சம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Nov 2023 9:58 AM GMT

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்போது நூல் வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கிறது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணை நீந்தர் அவர்கள் இன்னும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்து நிறைவு செய்து இருக்கிறார். குறிப்பாக இந்த நூலின் சாராம்சம் உலக நாடகத்தினர் கொண்டாட்டத்தின் பொழுது நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கள் அதாவது ஆங்கிலத்தில் செமினார் என்று அழைக்கப்படும் ஒட்டுமொத்த நிகழ்வின் தொகுப்பு ஆகும்.


புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் அவர்கள் “Interdisciplinary Art Practices: Problems and Possibilities” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் 2022-ஆம் ஆண்டு உலக நாடக தினக் கொண்டாட்டத்தின் பொழுது நடத்தப் பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். முனைவர் கோ.ரா. இராசா ரவிவர்மா, இணைப் பேராசிரியர், நிகழ்த்துக் கலை துறை, புதுவைப் பல்கலைக்கழகம் அவர்கள் மேற்குறித்த கட்டுரைகளை தொகுத்தும் பகுத்தும் நூலாகப் பதிப்பித்துள்ளார்.


இந்த நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்துக்கலைத் துறையின் புலத்தின் டீன் பேராசிரியர் பெ. ஸ்ரீதரன், துறைத்தலைவர் முனைவர் சரவணன் வேலு, பயிற்றுநர் முனைவர் ப. முருகவேல், உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பவித்ரா, முனைவர் பிரியங்கா சர்மா மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News