புதுச்சேரி: நான் சூப்பர் முதல்வர் இல்லை.. ஆளுநர் தமிழிசை..
By : Bharathi Latha
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக பழங்குடியினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களை தரையில் அமர்த்தி வைத்ததாக சர்ச்சை ஒன்று எழுந்து இருந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் ஆளுநர் அனுமதியுடன் தான் இந்த ஒரு நிகழ்வு நடந்தேறி இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக இன்றைய பத்திரிக்கை சம்பவத்தினர் நாகரிகமான செய்திகளை வெளியிட வேண்டும் உண்மை இதுவென்று தெரியாமல் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் ஆளுநர் தமிழிசை அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆனால் நான் 6 பழங்குடியினர் கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறேன். குறிப்பாக அரசுப் பள்ளியில் நாற்காலிகள் இல்லை என்பதற்காக என்னுடைய சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கிக் கொடுத்துள்ளேன் நான் எப்படி பழங்குடியினர் தரையில் அமருவதற்கு அனுமதி அளித்து இருப்பேன்? என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
புதுச்சேரியில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்து வருகிறது என்பதைப் பற்றி நான் பார்ப்பது இல்லை மாறாக நிர்வாகத்தை பற்றி ஏதாவது குறைவான செய்தி வந்திருக்கிறதா அவற்றை எப்படி சரி செய்வது மற்றும் அதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy:News