மகளிர் தினத்தில் ஒரு நாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாறிய கல்லூரி மாணவி!
By : Thangavelu
மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரு நாள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நியமித்த காவல்துறை உயர் அதிகாரிகள்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னம்பல முதலியார் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதனர். இவர் ஒரு டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் நிவேதா கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், என்.சிசி.யில் விமானப்படை பிரிவில் கேட்ட சார்ஜண்ட் ஆகவும் இருக்கிறார். இதற்கிடையில் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை கவுரவப்படுத்த கிழக்குப்பகுதி போலீஸ் எஸ்.பி. தீபிகா முடிவு செய்தார். அதன்படி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஒரு நாள் மட்டும் சப் இன்ஸ்பெக்டராக நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி நிவேதாவை தேர்வு செய்தார்.
இதனிடையே நேற்று (மார்ச் 8) காலை 7 மணியளவில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் மாணவி நிவேதா பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது போலீஸ் உடை அணிந்து ஜீப்பில் வந்த அவருக்கு மற்ற போலீசார் சல்யூட் அடித்து வரவேற்றனர். பதிலுக்கு நிவேதாவும் சல்யூட் அடித்து மரியாதை கொடுத்தார். காலை 7 மணிக்கு சக போலீசாருக்கு என்னென்ன பணி வழங்க வேண்டுமோ அதனை முறைப்படி வழங்கினார். அதனை தொடர்ந்து நகரில் ஜீப்பில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் மாலை 6 மணிக்கு வீடு திரும்பினார்.
Source, Image Courtesy: Daily Thanthi