பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.82க்கும், டீசல் ரூ.104.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக குமராட்சியில் 109 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே மத்திய அரசு கலால் வரிரை குறைத்தால் கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.55க்கும், டீசல் 93.54க்கும் விற்பனை செய்யப்பட்டது.
By : Thangavelu
தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.10ம் குறைக்கப்பட்டது. இதனை பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் மேலும் வாட் வரியை குறைத்து மிக குறைந்த ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு குறைத்த வரியை தவிர தமிழக அரசு எவ்வித விலையும் குறைத்த பாடில்லை. இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.82க்கும், டீசல் ரூ.104.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக குமராட்சியில் 109 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே மத்திய அரசு கலால் வரிரை குறைத்தால் கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.55க்கும், டீசல் 93.54க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கடலூர் மாவட்டம் அருகாமையில் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று பெட்ரோல் ரூ.94.99க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு சென்று டேங்குகளை நிரப்பி வருகின்றனர். இதனால் புதுச்சேரிக்கு செல்லும் சாலையில் கூட்டம் நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தை விட புதுச்சேரியில் மிகவும் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஏன் இன்னும் தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:Hindu Tamil