Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 21ம் தேதி உடல் தகுதித்தேர்வு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 21ம் தேதி உடல் தகுதித்தேர்வு!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jan 2022 12:03 PM IST

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் 21ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடத்தபட உள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு காவல்துறை துணை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: காலியாக உள்ள 431 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 18ம் தேதி முதல் காவல்துறை விருந்தினர் மாளிகையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் மாகி, காரைக்கால் பகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அது போன்றவர்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி 21) கோரிமேடு போலீஸ் மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்ப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ் இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News