புதுச்சேரியில் புழங்கும் கள்ளநோட்டுகள்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தீவிர விசாரணை!
சுற்றுலா நகரமாக விளங்கி வரும் புதுச்சேரி மாநிலத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு போதை பொருள் மற்றும் விபசாரம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
By : Thangavelu

இதனிடையே வெளிமாநிலங்களில் இருந்தும் வரும் ஒரு சிலர் தற்போது கள்ளநோட்டுகளையும் புழக்கத்தில் விட்டு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள தேசிய வங்கியிலிருந்து பணம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அங்கு பணக்கட்டுகளை அதிகாரிகள் சோதித்தபோது, ரூ.100 கள்ள நோட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் மேலாளர் அமர்நாத் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டு கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi