இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆரோவில் பிரச்சாரம் செய்ததா? - காவல்துறை தீவிர விசாரணை!
By : Thangavelu
புதுச்சேரி மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் ஒன்று உள்ளது. அங்கு அன்னையின் கனவு திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள் நடந்த சமயத்தில் ஆரோவில்லில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் விரிவாக்க பணிகள் தொடரப்பட்டது.
இந்நிலையில், ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்திருக்கும் டவுன்ஹால் முகப்பு கட்டத்தில் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தது. அதாவது ஆரோவில் தற்போது சுதந்திர நாடாக மாற வேண்டும் எனு குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பற்றி ஆரோவில் பவுண்டேசன் சார்பில் சீனிவாசமூர்த்தி ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் எம்.பி., ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Maalaimalar
Image Courtesy: Linkedin India