10 ஆண்டுகள் கழித்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் மும்முரம்!
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தற்போது மும்முரமாகி வருகிறது.
By : Thangavelu
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தற்போது மும்முரமாகி வருகிறது. புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2011ம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டமாக அக்டோபர் 21, 25, 28 ஆகிய நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்திருந்தார். இந்த கூட்டணியில் அதிமுக நீடிக்கும் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi