படிக்க நேரம் இல்லை, ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை வைத்து இப்போதும் பேசுகிறேன்: புதுச்சேரி முதல்வர்!
புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
By : Bharathi Latha
நேற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நோக்கத்துடன், புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சி காமராஜர் மணி மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் மற்றும் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் கொடுத்து வழங்கினார்கள்.
அப்போது புதுச்சேரி முதலமைச்சர் பேசுகையில், அறிவுரை கூறுங்கள் முன்னால் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நான் ஜிப்மர் நிகழ்ச்சிக்கு வந்தபோது பார்த்துள்ளேன். அவர் மிகவும் கம்பீரமாக இருப்பார் ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்து வயது குழந்தைக்கு நல்ல அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டும். அதுதான் மனதில் பசுமரத்தாணி போல் பதியும் எனக்கு உண்மையில் இப்பொழுது புத்தகங்கள் படிக்க நேரம் கிடையாது. ஆனால் என்னுடைய ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததை வைத்து தான் நான் இப்போதும் பேசுகிறேன்.
நான் கடந்த காலத்தில் கல்வி அமைச்சராக செயல்பட்டு தற்போது முதல்வராக உயர்ந்திருக்கிறேன் என்றால் கல்வித்துறை மிகவும் முக்கியமான துறையில் ஒருவருடைய அடி அடையாளத்தை தீர்மானிக்கும் துறையாகவும் கல்வி அமைந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், பல்வேறு ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy:News