Kathir News
Begin typing your search above and press return to search.

கூட்டமாக சென்று வாக்களிக்கலாம்: 144 தடை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் சமயங்களில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கடந்த 7ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கூட்டமாக சென்று வாக்களிக்கலாம்: 144 தடை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

ThangaveluBy : Thangavelu

  |  5 April 2021 4:57 AM GMT

புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும் மற்றும் நண்பர்களுடன் கூட்டமாக சென்று வாக்களிக்க தடையில்லை என்று ஆட்சியர் பூர்வா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் சமயங்களில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கடந்த 7ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஊர்வலம் மற்றும் 5 நபர்களுக்கு மேல் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது 144 தடை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.




இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தரப்பில் 144 தடை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை. 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது. நாளை நடைபெறும் (ஏப்ரல் 6) வாக்குபதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் நுழைவதை தடுப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News