புதுச்சேரி: இன்று முதல் கொரோனா தடுப்பூசி 18-44 வயதுக்கு உள்ளவர்களுக்கு தொடக்கம்.!
புதுச்சேரியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட நபர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்த மே 20 முதல் யூனியன் பிரதேசத்தில் ஏழு மையங்களில் தொடங்கப்பட்டது.
By : Janani
புதுச்சேரியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட நபர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்த மே 20 முதல் யூனியன் பிரதேசத்தில் ஏழு மையங்களில் தொடங்கப்பட்டது. சுகாதார மற்றும் குடும்பநல துறை அமைச்சகம் தனது மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ராஜ் நிவாஸில் வைத்து லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகாரப்பூர்வ கோவின் போரட்டலில் முன்பதிவு செய்யத் துவங்கி வைத்தார்.
புதுச்சேரியில் நிர்வாகத்தின் முயற்சியின் மூலம் இந்த இலக்கை அடைந்துள்ளது, 18 வயது மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ளது என்று தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தைத் திட்டமிடுவதற்கு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பயனாளர்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போரட்டலில் முன்பதிவு செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். முன்பதிவு செய்யும் போது பயனாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் நான்கு இடங்களிலும், காரைக்காலில் ஒன்று, யாணம், மாஹே ஆகியவற்றில் தலா ஒரு மையங்களும் உள்ளது, மேலும் வாக்-இன் பதிவுகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது அரசாங்கம் வழங்கும் இலவச தடுப்பூசி என்பதால், புதுச்சேரியில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் தகுதி வழங்கப்படுகின்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்கள் ஆதார அல்லது ஏதாவது அடையாள அட்டையுடன் செல்லவேண்டும். சரிபார்க்கப்பட்ட பின்னரே தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் லெப்டினென்ட் ஆளுநர், பொது மக்கள் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மற்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.