Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்.!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்.!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 4:28 PM GMT

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை பொறுப்பேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். தற்போது அவருக்கு புதுச்சேரி மாநிலம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளநர் ஆக இருந்த கிரண்பேடி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 9 மணியளவில் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். அவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story