பாரம்பரிய மருந்துக்கு அதிக வரவேற்பு - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்!
இந்தியாவின் பாரம்பரியம் மருந்துகளுக்கு அதிகம் வரவேற்பு கிடைப்பதாக ஆளுநர் தமிழிசை பெருமிதம் கொள்கிறார்.
By : Bharathi Latha
சர்வதேச அளவில் சர்வதேச ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய இந்த முறை சிகிச்சை ஆராய்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்று தெலுங்கானா மாநில ஆளுநரும், துணைநிலை ஆளுநருமான டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். சென்னை கோட்டம் குளத்தூர் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இரண்டு நாட்கள் நடைபெற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஆயுர்வேத தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையில் ஆயுர்வேதம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
நோய்களின் குணமாக்குவதுடன் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத இந்தியா மருத்துவ முறை மக்கள் மத்தியில் தற்பொழுது நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்திய மருத்துவ முறை சிகிச்சையும் மேற்கொள்வது அவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வருமுன் காக்கும் நோக்கில் உலகின் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள், பெருங்காயம் போன்ற உள்ளிட்டு பொருட்கள் சேர்த்து உண்ணும் வாழ்வியல் விளக்கத்தை கடைப்பிடித்து வரும் நம் முன்னோர்கள் வழிபாட்டு தளங்களில் துளசி, வில்வம், சந்தனம் போன்ற மருத்துவ பண்புகள் கொண்ட பிரசாதமாக இருந்த போதும் இப்போதும் பயன்படுத்தி வருவதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy : News