புதுச்சேரி ஜிம்பரில் மருந்து தட்டுப்பாடு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடி ஆய்வு!
புதுச்சேரி ஜிம்பரை மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
By : Bharathi Latha
புதுச்சேரி ஜிம்பரில் மருந்துகள் தட்டுப்பாடு புகாரின் எதிரொலி காரணமாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் ஆய்வில் அங்கு மேற் கொண்டுள்ளார். திடீர் ஆய்வில் ஜிம்பர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் கட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதை அடுத்து கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சபாநாயகர், அமைச்சர் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வழிமுறைகள் மற்றும் அதற்கான உள்கட்டமை வசதிகளை குறித்த கவர்னர் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு மருந்தக வசதிகளை ஏற்படுத்துதல், தொடர்பு அதிகாரிகளை நியமித்தல், விசாரணை மையங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு ஏற்பாடுகளை செய்வதற்காக பொதுக்கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக கூடப்பட்ட இந்த பொதுக்கூட்டம் முடிந்தவுடன் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அவசர கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது. ஜிம்பரில் கடந்த ஆண்டு 2,47,000 ஆயிரம் பேர் பெற்று இருந்தார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்தில் எழுபதாயிரம் பேரும், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 60,000 பேரும், பிற மாநிலங்களை சேர்ந்த பத்தாயிரம் பேரும் ஆவார்கள். அனைவரும் மருந்துகளை இலவசமாக தரப்படுகிறது என்று அவர் கூறினார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள புற நோயாளிகளுக்கு முழு செலவை அரசை ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மருந்துகள் இல்லை என்று வெளியில் மருந்து சீட்டு எழுதி தர கூடாது என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Thanthi News