சட்டத்திற்கு உட்பட்டு தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் - தமிழிசை சௌந்தரராஜன்!
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.
By : Bharathi Latha
அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்புச் சட்டத்துகளுக்கு உட்பட்ட தான் செயல்படுவதாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டு இருக்கிறார். புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் குழந்தை தினத்தை கொண்டாடிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மாலையில் கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் உரையாடலில் சில முக்கியமான அம்சங்கள்:
இன்றைய மாணவர்களுக்கான கல்விமுறை சவால்கள் எதிர் கொள்ளும் விதத்தில் நம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதி படுத்த கொள்ள வெற்ற ஆளராக உருவாக்குவதற்கு முயற்சிகளை மாணவர்கள் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் கவர்னரை குறை சொல்ல முடியாது.
கவர்னரின் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்று கூறமுடியாது. கவர்னர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. பல மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று நினைத்திருக்கலாம். கவர்னர் பற்றிய அடிப்படை ஆதாரம் மற்றும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இப்பொழுது கவனம் கவர்னரின் பக்கம் திரும்பி இருக்கிறது. ஆனால் சின்ன, சின்ன நடவடிக்கைகள் கூட விமர்சனம் செய்வது என்பது சில அரசியல்வாதிகளின் கருத்தாக இருக்கிறது. கவர்னர்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட தான் செயல்படுகிறார்கள் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News