நிதி அமைச்சரை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு.
By : Bharathi Latha
தற்பொழுது இந்தியாவின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஏப்ரல் ஒன்றாம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளின் இந்தியாவின் ப்ளூ பிரிண்ட் என மத்திய அரசு ஏற்கனவே வர்ணித்து இருந்தது. அந்த வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சாத்தராமனை நேரில் சந்தித்தார்.
அப்பொழுது தொலைநோக்கு பார்வையுடன் மத்தியபற்ற தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்த பேசியிருக்கிறார்.
அப்பொழுது தொலைநோக்கு பார்வையுடன் 2023 மற்றும் 24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எனக்கு கூறி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வருங்கால முன்னேற்றத் திட்டங்கள் குறித்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar