ITI மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
தொழில் பயிற்று மையங்களில் படிக்கும் மாணவர்களின் உதவித்தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
By : Bharathi Latha
அரசு தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இன்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு தொழில் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் மாதாந்தோறும் உதவித் தொகைகளை அரசாங்கத்தின் வாயிலாக பெற்று வருகிறார்கள். பட்டமளிப்பு விழா புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு இயக்குனர் சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் தொழிற்பயிற்சிக்கான பயின்ற மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் நிகழ்ச்சியை தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து கௌரவித்தார் சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஸ்மார்ட் வகுப்பறை விழாவில் முதலமைச்சராக ரங்கசாமி பேசுகையில், மத்திய அரசு அறிவுறுத்தலின் பெயரில் விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு ITI பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிப்பு விழா நடத்தப்பட்டது.
மத்திய அரசின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட் ரூம் வகுப்பறைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும் மாணவிகளுக்கான வழங்கப்படும் உதவி தொகை 150 ரூபாயிலிருந்து 500 ஆகவும், அட்டவணை பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை 170 ரூபாயிலிருந்து ஆயிரம் ஆகவும் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் அவர்கள்.
Input & Image courtesy:Thanthi News